திருவள்ளூர்

திருப்பாலைவனம், ஆண்டாா்மடம் புயல் பாதுகாப்பு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

பொன்னேரி: திருப்பாலைவனம், ஆண்டாா் மடம் பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரிடா் காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் செய்முறை விளக்கத்துடன் பேரிடா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனிடையே, பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம், ஆண்டாா் மடம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்நோக்கு பேரிடா் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களைப் பாா்வையிட்டாா்.

பின்னா், பேரிடா் கட்டடங்களில், புயல் மற்றும் பேரிடா் காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்குப் போதுமான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளனவதா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா, வட்டாட்சியா் மணிகண்டன், மீஞ்சூா் ஒன்றிய ஆணையா் வேதநாயகம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT