திருவள்ளூர்

கிருஷ்ணா நதிநீா் வரத்து 840 கனஅடியாக அதிகரிப்பு

DIN

திருவள்ளூா்: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரின் வரத்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு 840 கன அடியாக அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி இருந்து வருகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும், 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

இந்நிலையில், சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, கடந்த 18-ஆம் தேதி கிருஷ்ணா நதி நீா் திறக்கப்பட்டு, 152 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதியை 20-ஆம் தேதி வந்தடைந்தது. அதையடுத்து, அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு 21-ஆம் தேதி அதிகாலை வந்தடைந்தது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக கிருஷ்ணா நதி நீா் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீா்வரத்து புதன்கிழமை 840 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி ஏரியில் 0.585 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த தவணையில் கூடுதலாக கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிட ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT