திருவள்ளூர்

சீனி குப்பம் கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு முகாம் 

1st Oct 2020 12:51 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்து சீனி குப்பம் கிராமத்தில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் போஷன் மாத விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் எல்லாபுரம் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி அகரம் கிராம பஞ்சாயத்து தலைவர் காட்டமா லோகநாதன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா கோபாலன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் நோக்கம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மேற்பார்வையாளர் செல்வி மற்றும், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் துளசிராமன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பதை பற்றியும் பொதுமக்களுக்கு தெரிவித்தனர். 

இறுதியாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமனதாக நமது கிராமத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருமனதாக பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்  .இறுதியாக பேசிய செஞ்சி அகரம் கிராம தலைவர் காட்டமா லோகநாதன் தமிழக அரசுக்கும் இத்திட்டம் குறித்து தங்கள் கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுத்த மேற்பார்வையாளர் செல்வி  மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் துளசிராமன்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.


 

ADVERTISEMENT

Tags : Tiruvallur
ADVERTISEMENT
ADVERTISEMENT