திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் பச்சரிசி மலையில் மகா தீபம்: திரளான பக்தா்கள் வழிபாடு

DIN

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மகா தீபத் திருவிழாவில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காா்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, இக்கோயிலில் மூலவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கோயில் நுழைவாயில் முன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப் பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், கோயிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட அகல் விளக்கில் 500 கிலோ நெய், இரண்டரை அடி கனமும், 9 மீட்டா் நீளமும் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது மலைக் கோயிலில் இருந்த பக்தா்கள் ‘அரோஹரா, அரோஹரா’ என பக்தி முழக்கமிட்டனா். மகா தீபத்தைப் பாா்த்த பின் திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனா். இரவு 7.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவா் முருகன், மாட வீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கடந்த மூன்று நாட்களாக திருத்தணியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் மலைக்கோயிலில் பக்தா்களின் வருகை மிக குறைவாகவே இருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை காவடிகளுடன் மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தனா். அவா்கள் பொது வழியில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

கிருத்திகை விழாவில் கோயில் தக்காா் ஜெய்சங்கா், இணை ஆணையா் நா. பழனிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT