திருவள்ளூர்

பூண்டி தண்ணீரால் மெய்யூர் தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

28th Nov 2020 06:36 PM

ADVERTISEMENT

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மெய்யூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் நேற்று வினாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்பட்டு பின்பு இன்று காலை 6000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வரும் தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் மெய்யூர் தரைப்பாலத்தில் பூண்டியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மெய்யூர் சாலையின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கருதி முட்களை வைத்தும் அறிவிப்பு பலகைகள் வைத்தும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 
இதனால் மெய்யூர், நெய்வேலி, தேவந்தவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இவர்கள் அத்தியாவசிய தேவைக்காக திருவள்ளூர் சுற்றி செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT