திருவள்ளூர்

திருவள்ளூரில் காணாமல் போனவர்களை அடையாளம் கண்டறியும் முகாம்

22nd Nov 2020 06:24 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் காணாமல் போனவர்களை அடையாளம் காணும் வகையில் விபத்துக்களில் இறந்தோர், புகைப்படங்களை பார்த்து கண்டறியும் முகாமில் காணாமல் போனதாக புகார் அளித்த 95 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதில் 2 பேரின் அடையாளம் ஒத்துப்போவதால் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் இறந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் அகன்ற திரையில் காண்பித்து அடையாளம் காணும் வகையில் புகார் அளித்த 91 குடும்பத்தினரை நேரில் அழைத்து முகாம் நடத்தவும் காவல் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளித்தோர் மற்றும் அடையாளம் தெரியாதோர்களை கண்டறியும் வகையில் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தலைமை வகித்து, திருவள்ளூர் காணாமல் போனவர்களை நீண்ட நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், பல்வேறு சம்பவங்களில் இறந்தோர்களின் புகைப்படங்களை திரையில் காண்பித்து தொடங்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்த காணாமல் போனவர்களின் புகைப்படங்களை திரையில் காண்பித்து அதன் விவரங்களையும் காவல் துறையினர் விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில் பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2017-இல் கன்னியப்பன்(76) என்பவர் காணாமல் போனதாக கொடுத்த புகாரில் அவரது மகன் பாலசுந்தரம் ஓரளவு ஒத்துப் போவதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற மூதாட்டி காணாமல் போனதாக கொடுத்த புகாரில் ஒரு மூதாட்டியின் படம் திரையிடப்பட்டது. அப்போது அவரது மகள் தனது தாயுடன் ஒத்துப் போவதாக குறிப்பிட்டார். இதையடுத்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் எஸ்.பி உத்தரவிட்டார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து அடையாளம் அறிந்து கொள்ளும் வகையில் புகார் அளித்த 91 குடும்பத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதோடு, இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர், திருப்பத்தூர், மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நகரி போன்ற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்ளுக்குள்பட்ட பகுதியில் விபத்துக்கள், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தோர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. தமிழக காவல் துறை சார்பில் செயல்படும் இணையதள பக்கத்திலும் இதுபோன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதை கிராமத்தில் உள்ளவர்களால் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளு. இதுபோன்றவைகளை கருத்திற்கொண்டு ஒரு இடத்திற்கு அழைத்து வந்து திரையில் காண்பித்து அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அப்போது, கூடுதல் கண்காணிப்பாளர்கள் முத்துக்குமார், மீனாட்சி மற்றும் காவல் துணைக்கண்காணிப்பாளர் துரைபாண்டியன், ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT