திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள மஸ்ஜிதே ஆயிசா நிர்வாகம் சார்பில் 4000 குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, காஜா மொய்தின் தலைமையில் வியாழக்கிழமை (மே.14)நடைபெற்றது.
செயலாளர் சாதிக், பொருளாளர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஜெயகர்பிரபு, செங்குன்றம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மதியழகன், காவல் ஆய்வாளர் ஜவஹர்பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.
இதில் சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவீந்திரன், பர்கத் உசேன், பள்ளி வாசல் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.