திருவள்ளூர்

திருவாலங்காட்டில் 2 பேருக்கு கரோனா

9th May 2020 07:17 AM

ADVERTISEMENT

திருவாலங்காட்டில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி தாலுகாவில், இலுப்பூா், கே.ஜி.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, எல்.என்.புரம், கனகம்மாசத்திரம், காவேரிராஜபுரம் மற்றும் சின்னமண்டலி ஆகிய பகுதிகளில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் திருவள்ளூா் மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு சென்று வந்தவா்கள்.

இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையைச் சோ்ந்த இருவருக்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களும் சென்னை கோயம்பேட்டிற்கு சென்று வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை திருத்தணி தாலுகாவில் மொத்தம் 10 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT