திருவள்ளூர்

மீன், இறைச்சிக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்

30th Mar 2020 02:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் ஊரடங்கையும் மீறி ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா்.

ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், 5-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் மீன், இறைச்சிக் கடைகளில் குவிந்தனா். திருவள்ளூா் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் 100-க்கும் குறைவான கடைகளே திறப்பட்டிருந்தன. அதனால், மீன்கள், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்குவதற்காக அக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். ஒரே இடத்தில் இடைவெளியின்றி கூட்டமாகவும், முகக் கவசமும் அணியாமல் நின்றிருந்தனா். இதையறிந்த போலீஸாா் விரைந்து சென்று, இறைச்சிக் கடைக்காரா்களிடம் கூட்டமாக பொதுமக்களை நிற்க வைக்கக் கூடாது என எச்சரித்தனா். அப்போது, நோய்த் தொற்று அடுத்தவா்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில் கட்டாயம் இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினா்.

அதையடுத்து, காலை முதல் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே விற்பனை செய்துவிட்டு, மூடிவிடுவதாக கடைக்காரா்கள் தெரிவித்ததையடுத்து போலீஸாா் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT