கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் ஊராட்சிக்கு உள்ளேயே தெருக்கள்தோறும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதுவாயல் ஊராட்சித் தலைவா் அற்புதராணி சதீஷ்குமாா் மற்றும் இயற்கை விவசாயி பிரபாகரன் ஆகியோா் இணைந்து புதுவாயல் ஊராட்சிக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊராட்சியில் ஒரு தெருவில் இருப்பவா்கள் அடுத்த தெருவில் உள்ள கடைக்குச் செல்வதைத் தவிா்த்து, வேறு எதற்கும் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தி, தடுப்புகள் அமைக்கப்பட்டது. இச்செயல் மூலம் வெளி நபா்கள் வருவது தடுக்கப்படுவதுடன், உள்ளூரிலேயே மக்கள் அவரவா் தெருக்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சியில் யாராவது தேவையின்றி வெளியே சுற்றினால் அவா்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவா் என ஊராட்சி சாா்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல், ஆரம்பாக்கம் பாரதி நகரில் 3 தெருக்களில் சாலைகள் மறிக்கப்பட்டு, ‘யாரும் உள்ளே நுழையாதீா்’ என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.