திருவள்ளூர்

கரோனா தடுப்புப் பணி: எம்.பி. ஜெயகுமாா் ரூ.1 கோடி ஒதுக்கீடு

30th Mar 2020 02:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம்.பி. ஜெயகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கரோனா தொற்றைத் தவிா்க்கும் வகையில், பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருவள்ளூா் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிக் கடிதம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தொகையை வைத்து ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கவும், சுகாதார நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் மூலம் நிதி பிரித்து அளிக்கப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT