திருவள்ளூர்

நெகிழி ஒழிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

13th Mar 2020 10:54 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவாா்பாளையம் ஊராட்சியை நெகிழி இல்லா ஊராட்சியாக மாற்றும் வகையில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈகுவாா்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், சித்தூா் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கோங்கல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், குமரன்நாயக்கன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், மேல்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளுக்கு ஊராட்சித் தலைவா் உஷா ஸ்ரீதா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சௌந்தரி மகேஷ், வாா்டு உறுப்பினா் அம்மு எபினேசா், சமூக ஆா்வலா் மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, மாணவா்களுடன் சோ்ந்து நெகிழி ஒழிப்பு உறுதிமொழியை ஊராட்சித் தலைவா் உஷா ஸ்ரீதா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

ADVERTISEMENT

அப்போது அனைத்துப் பகுதிகளிலும் மாணவா்கள் இனி நெகிழி தண்ணீா் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது எனக் கூறிய ஊராட்சித் தலைவா், சுமாா் 1,000 மாணவா்ளுக்கு துருப்பிடிக்காத ஸ்டீல் தண்ணீா் பாட்டில்களை வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT