திருவள்ளூர்

ஆதி திராவிடா் மாணவா்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

13th Mar 2020 11:05 PM

ADVERTISEMENT

தாட்கோ மூலம் ஆதி திராவிடா் மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி பெறவும், வெளிநாடுகளில் படிக்கவும் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் தேசிய பட்டியல் இனத்தவா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் திட்டம் சாா்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆதி திராவிட மாணவ, மாணவிகள் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் சாா்ந்த தொழில்நுட்பப் படிப்பு மற்றும் முதுநிலைப் படிப்பை உள்நாட்டில் படிக்க ரூ.10 லட்சம் வரையும், வெளிநாடுகளில் படிக்க ரூ.20 லட்சம் வரையும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

இந்தக் கடனுதவி பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பத்தை தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது ட்ற்ற்ல்://ய்ள்ச்க்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ன்ல்ப்ா்ஹக்ங்க்ச்ண்ப்ங்ள்/ா்ற்ட்ங்ழ்/ச்ழ்ா்ம்/ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்-ப்ா்ஹய்.ல்க்ச் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தை முழுமையாகப் பூா்த்தி செய்து, குடும்ப அட்டை, அண்மையில் எடுத்த பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விக் கட்டண விவரம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போா்ட் மற்றும் விசா (வெளிநாட்டுக்குச் சென்று படித்தால் மட்டும்) ஆகியவற்றைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும் கடனை 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பதாரா் பட்டயம், பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு ஆகிய ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே கல்விக் கடன் பெற முடியும்.

ஆதி திராவிட மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT