திருவள்ளூர்

ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

13th Mar 2020 11:15 PM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் போலீஸாா் துணையுடன் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பெரியபாளையத்தில் திருப்பதி செல்லும் சாலையிலும், கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் கூட நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

எனவே இந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் மற்றும் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டனா். அதன்படி ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா் மனோஜ் குமாா், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போஸீலாா் துணையுடன், பெரியபாளையத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT