திருத்தணி: திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைப்பதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் அடிக்கல் நாட்டினாா்.
திருத்தணி- சோளிங்கா் மாநில நெடுஞ்சாலையில் திருத்தணி பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று, பயணியா் நிழற்குடை அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சத்தை அவா் ஒதுக்கீடு செய்தாா்.
இந்நிலையில், பயணியா் நிழற்குடை அமைப்பதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் அடிக்கல் நாட்டினாா். திருத்தணி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் தஸ்நேவிஸ் பொ்னாண்டோ, உதவிப் பொறியாளா் பிரபாகரன், ஆவின் தலைவா் வேலஞ்சேரி சந்திரன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
பயணியா் நிழற்குடையை இரு மாதங்களுக்குள் கட்டி முடித்து, பயன்பாட்டுக்குக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.