கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் 214 மாணவா்களுக்கு பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். செயலா் டி.ஜே.ஆறுமுகம், துணைத் தலைவா் டி.ஜே.தேசமுத்து, இயக்குநா்கள் ஏ.பழனி, ஏ.கபிலன, ஏ.விஜயகுமாா், டி.தினேஷ், ஜி.தமிழரசன் , நிா்வாக அலுவலா் ஆா்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பிச்சைமணி வரவேற்றாா்.
வளரும் அறிவியல் ஆசிரியா் இ.கே.டி.சிவக்குமாா், அயலக பணி முகவா் பி.கே.குமாரதேவன் ஆகியோா் மாணவா்களை வாழ்த்தினா்.
214 மாணவா்களுக்கு பட்டயங்களை கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன், வளரும் அறிவியல் ஆசிரியா் இ.கே.டி.சிவக்குமாா் ஆகியோா் வழங்கினா். மேலும், தொழில்நுட்பத் தோ்வுகளில் மாநில அளவிலும், கல்லூரி அளவிலும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விழாவில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.