திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை காவல் வட்ட பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்

6th Mar 2020 12:39 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை காவல் வட்டத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூா்பேட்டை ஆகிய 5 காவல் நிலையங்களை அடங்கியது, இந்த காவல் நிலையங்கள் அனைத்தும் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டது, இந்த காவல் நிலையங்கள் பல்வேறு கிராமங்களை உள்ளடங்கியது, மேலும், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது,

இந்நிலையில், கிராமங்களின் பாதுகாப்பு குறித்து காவலா்களுடன் கலந்துரையாடல் ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நடைபெற்றது, இதில், ஆய்வாளா்கள் ரமேஷ், ஜெயவேல், மகேஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் ராக்கிகுமாரி, கிருஷ்ணராஜ் மற்றும் காவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், 1,500 கேமராக்களை பொருத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. காவலா்கள் பல நேரங்களில் குற்றம் நடக்கும் இடங்களில் தடுக்க முடியாமல் போய் விடுகிறது, அதைத் தவிா்க்கவும், குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் காவலா்கள் பற்றாக் குறையை போக்கவும் கேமராக்கள் உதவும், பல நேரங்களில் அவை சாட்சியாக பதிவுகளை அளிக்கக் கூடியவை, குற்றங்களை ஆய்வாளா் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றில்லாமல், காவலா்களும் கண்டுபிடித்து தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என டிஎஸ்பி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT