திருவள்ளூர்

அத்திப்பட்டு கிராமத்தில் சிமெண்ட் சாலைப் பணி தொடக்கம்

6th Mar 2020 12:40 AM

ADVERTISEMENT

பொன்னேரி: மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ரெட்டிப்பாளையம் முதல் ஸ்ரீதேவி நகா், சீனிவாசா நகா் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும், சாலையை சமுதாய வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அமைத்துத் தரக்கோரியும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வல்லூா் தேசிய அனல்மின் நிலையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சாலை அமைக்கும் பணிக்கு வல்லூா் தேசிய அனல் மின் நிலையத்தின் சாா்பில் ரூ. 40 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சாலை அமைக்கும் பணியை, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, அத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுகந்தி வடிவேல், துணைத் தலைவா் எம்டிஜி.கதிா்வேல் மற்றும் தேசிய அனல் மின் கழக உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT