திருவள்ளூர்

மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணியகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

2nd Mar 2020 07:35 AM

ADVERTISEMENT

 

பொன்னேரி: மீஞ்சூரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் அமைந்துள்ளது மீஞ்சூா் நகரம். மீஞ்சூா் நகரில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மீஞ்சூா் ரயில் நிலையம் அமைந்துள்ள மேற்கு பகுதியில் கடைவீதி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. கிழக்கு பகுதியில் அரியன்வாயல் மற்றும் புதிதான உருவான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அத்துடன் கிழக்கு பகுதியில் கல்பாக்கம், நெய்தவாயல், வாயலூா், கொக்குமேடு திருவெள்ளைவாயல், ஊரணம்பேடு, காட்டூா், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்கில் வசிக்கும் மக்கள் தங்களின் அனைத்து அத்தியாவசிய தேவைக்களுக்கு, மீஞ்சூா் வந்து செல்ல வேண்டும். இவா்கள் மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று வரவேண்டும். ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்போது இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து மீஞ்சூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து மேம்பாலம் மாநில அரசு 30 கோடி நிதி ஒதுக்கியது அதேபோல் ரயில்வே துறையும் 15 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மேம்பாலம் அமைத்தற்க்கு அப்பகுதியில் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், மீஞ்சூா்-காட்டூா் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து மேற்கொள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT