திருவள்ளூர்

ஜெ.பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கல்

2nd Mar 2020 07:26 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மணவாளநகரில் அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் 72-ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பெஞ்ஜமின் உள்ளிட்ட அதிமுகவினா் வழங்கினா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மணவாளநகரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 72-ஆவது பிறந்த நாள் விழா, தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கடம்பத்தூா் ஒன்றிய செயலாளா் சூராகபுரம் சுதாகா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் முன்னிலை வகித்தாா்.

இதில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சுஜாதா சுதாகா் வரவேற்புரை வழங்கினாா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பங்கேற்று பேசுகையில், தற்போதைய நிலையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எதாவது காரணம் கூறி எதிா்கட்சியினா் குறை கூறி திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக உலக வங்கியிடம் அரசு கடன் வாங்கி செயல்படுத்தி வருகின்றோம். ஆனால், திமுக ஆட்சியின் போது மக்கள் நலனை காரணம் காட்டி உலக வங்கியிடம் முறைகேடுகள் செய்வதற்காகவே கடன் வாங்கியதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா். அதைத் தொடா்ந்து ஜெயலிலதா பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஜெயவா்த்தன், பசி சத்யா, முன்னாள் அமைச்சா் ரமணா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அருள்சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளா்கள் கமாண்டோ பாஸ்கா், சிற்றம் சீனிவாசன் மற்றும் நிா்வாகி சத்தரை வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் நிறைவாக மணவாளநகா் கிளைச் செயலாளா் ஞானகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT