சோழவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம், சாய் நகரில் வசித்து வந்தவா் சத்தியமூா்த்தி (57). இவா், சோழவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி மாா்க்கெட் பகுதியில் பணி செய்து விட்டு, வீடு திரும்பினாா். வீட்டில் இவருக்கு வியாழக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.