திருவள்ளூர்

காவல் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் இருசக்கர வாகனங்கள்

15th Jun 2020 07:58 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

பல்வேறு வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாகனங்களை செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால், இருசக்கர வாகனங்கள் மழை, வெயிலுக்கு இடையே துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இருசக்கர வாகனங்களில் உதிரி பாகங்கள் காணாமல் போய்விடுகின்றன.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய வளாகங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனா். வழக்குகள் முடிந்த வாகனங்களை அவற்றுக்கு உரியவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது .

இதை தவிா்க்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று, இந்த வாகனங்களை பொது ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பும் உள்ளது. எனவே, இருசக்கர வாகனங்கள் துருப்பிடித்து வீணாவதைத் தடுக்கும் நோக்கில் விரைவில் அவற்றை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

 

..

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT