திருவள்ளூர்

பள்ளத்தில் விழுந்து இளைஞா் சாவு

14th Jun 2020 07:53 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த கொத்தியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலுமணி (35). இவா் புட்லூரில் தங்கியிருந்து, காக்களூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். புட்லூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூா் நோக்கிச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தாா். புட்லூா் ரயில்வே கேட் அருகே மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT