திருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றவர் தூக்கிட்டு தற்கொலை

11th Jun 2020 09:42 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி வியாழக்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் வரதராஜன்(66). இவர் கடந்த வாரம் காய்ச்சல் அறிகுறியுடன், சென்னையில் உள்ள தனியார் மருத்த்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கரோனாவுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தனிமையாக இருப்பதாக கூறி அங்கும், இங்கும் அலைந்து திரிந்த போது அமைதியாக இருக்கவும் பணியாளர்கள் கூறினார்களாம். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் மருத்துவமனை பணியாளர்கள் பார்த்துள்ளனர். அப்போது, முதியவர் படுக்கையில் இல்லாததை தொடர்ந்து தேடிய நிலையில் இரண்டாவது வளாகத்தில் தன்னைத்தானே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக திருவள்ளூர் நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக முதியவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, தற்போது கரோனா சிகிச்சையில் இருந்தவர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்ததற்கு காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus suicide தற்கொலை திருவள்ளூர் கரோனா Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT