திருவள்ளூர்

செங்குன்றத்தில் அதிகாரிகள் - வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

11th Jun 2020 12:11 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிகாரிகள் - வியாபாரிகளுடன் முகக் கவசம், சானிடைசிங், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்குன்றம் எம் 4 காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் தலைமையில் காவல் நிலைய வளாகத்தில்  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு செங்குன்றம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்கர் பிரபு, செங்குன்றம் (நாரிவாரிகுப்பம்) பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன்,  ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகவும் பரவி வருகின்றது. 

இந்த நிலையில் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் கரோனா தொற்று  கட்டுப்படுத்தவும்  உயிரிழப்பு தவிர்க்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் வியாபார நேரத்தையும், ஒரு சில நாள்கள் விடுமுறை அளிக்கவும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு உதவும்படி ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனடிப்படையில் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் நாளை (ஜூன்.12) முதல் செங்குன்றம் சுற்றுவட்டார வியாபாரிகள் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் விடுமுறை அளிக்கவும், 

செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாள்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும், அன்றாட தேவையான பால் விடுமுறை நாள்களில் காலை 10 மணி வரையும் வியாபாரம் செய்யவும் ஒத்துழைப்பு அளிக்க அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். வியாபாரி சங்க நிர்வாகிகளும் வியாபாரிகளும் ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து கூட்ட இறுதியில் உதவி ஆய்வாளர் சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். செங்குன்றம் வடக்கு வியாபாரிகள் சங்கம், செங்குன்றம் தெற்கு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், பாலவாயில் வியாபாரிகள் சங்கம், செங்குன்றம் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், நாரவாரிக்குப்பம் வியாபாரிகள் சங்கம், மொண்டியம்மன் நகர் வியாபாரிகள் நலச் சங்கம், பாடியநல்லூர் வட்டார வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : red hills Tiruvallur traders வியாபாரிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT