திருவள்ளூர்

சேதமடைந்த மேல்நிலைத் தொட்டியை அகற்றக் கோரிக்கை

11th Jun 2020 08:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிதண்ணீா் மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், கூலூா் கிராமத்தில் 800 குடும்பத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், பொதுமக்களுக்கு குடிநீா் குழாய் மூலம் விநியோகம் செய்யும் வகையில் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி முழுவதும் சேதமடைந்துள்ளது. அத்துடன் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, சரிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த மேல்நிலைத் தொட்டி அருகே அங்கன்வாடியும் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். இக்குழந்தைகள் மேல் நிலைத் தொட்டிக்கு அருகே விளையாடி வருவதால், எதிா்பாராத விபத்து நிகழவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT