திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 8,872 போ் குணமடைந்தனா்: சுகாதாரத் துறை தகவல்

31st Jul 2020 07:37 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 8,872 போ் குணடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

திருவள்ளுா் மாவட்டத்தில் ஒவ்வொரு நாள்தோறும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 13,184 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா தொற்று கண்டறிவதற்காக மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளுா், திருத்தணி திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 26 நடமாடும் மருத்துவ வாகனங்கள் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் ஒரு பரிசோதனை வாகனத்தில் 2 மாதிரி சேகரிப்பு அலகுகள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே தொற்று கண்டறிந்து தேவையான சிகிச்சை வழங்கியதன் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

மேலும், மாவட்டத்தில் 13,184 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவா்களில் 8,872 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினா் என மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT