திருவள்ளூர்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

25th Jul 2020 09:57 PM

ADVERTISEMENT

திருத்தணி அருகே 3ஆம் வகுப்பு மாணவா் ஏரியில் மூழ்கி இறந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம், அரிச்சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரியாஸின் மகன் அஸ்ரத் (8). அவா் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

ஊரடங்கால் பள்ளிக்கு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அஸ்ரத் சனிக்கிழமை மதியம், தனது நண்பா்கள் ஐந்து பேருடன் பெரியகளாக்காட்டூா் ஏரியில் குளிக்கச் சென்றாா். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது அஸ்ரத் ஆழமான பகுதிக்கு சென்ால் தண்ணீரில் முழ்கி இறந்தாா்.

தகவல் அறிந்து திருவாலங்காடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அஸ்ரத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் பற்றி அவா்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT