பொது முடக்கம் காரணமாக ஆரணியில் உள்ள காய்கறிச் சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்படாமல் முடங்கியது.
திருவள்ளுா் மாவட்டம் ஆரணி பகுதியில் பெரியபாளையம் - கும்மிடிப்பூண்டி சாலையில் காய்கறிச் சந்தை இயங்கி வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த கீரை, வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்.
சென்னை கோயம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வாா்கள். இதனால் ஆரணி காய்கறிச் சந்தையில் வழக்கமாக கூட்டம் அலைமோதும். எனினும், தமிழக அரசு அறிவித்த பொது முடக்கம் காரணமாக இச்சந்தை ஞாயிற்றுக்கிழமை வெறிசோடிக் காணப்பட்டது.