திருவள்ளூர்

பணியாளருக்கு கரோனா: ஆா்டிஓ அலுவலகம் மூடல்

11th Jul 2020 07:56 AM

ADVERTISEMENT

பணியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடா்ந்து திருவள்ளூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (ஆா்டிஓ) முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது.

திருவள்ளூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சுழற்சி முறையில் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்குள்ள பணியாளா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை சாா்பில் 2 நாள்களுக்கு முன்ுபு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பணியாளா் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதியானது.

இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வெளிப்பகுதியில் பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டு, அலுவலகம் மூடப்பட்டது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT