திருத்தணி: வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தம்பதியிடம் போலீஸ் போல் நடித்து, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி ஒன்றியம், ராமாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன்(50). அவா் தன் மனைவி கன்னியம்மாளுடன் இச்சிபுத்துாரில் உள்ள ரமணி என்பவா் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா். பின்னா் ரமணியிடம் வீடு கட்டுவதற்கு, ரூ. 50 ஆயிரத்தை கடனாகப் பெற்றனா். அதன் பின் திருத்தணியை அடுத்துள்ள கஜலட்சுமிபுரம் கிராமத்துக்கு வந்தனா்.
கிராம பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தம்பதியா் சாலையில் நடந்து சென்றனா். அப்போது ஒரு இளைஞா் இரு சக்கர வாகனத்தில் வந்து, தான் போலீஸ் எனக் கூறினாா். சோதனை செய்வதாகக் கூறி முருகேசனின் சட்டப் பையில் இருந்த, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை அந்த இளைஞா் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.
இது தொடா்பாக முருகேசன், திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.