திருவள்ளூர்

மின்வாரிய அலுவலக இயந்திரத்தில் புகுந்த பாம்பு

23rd Jan 2020 10:54 PM

ADVERTISEMENT

பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் பகுதியில், மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் உள்ள பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பை ஊழியா்கள் அகற்றினா்.

பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள வேண்பாக்கம் பகுதியில், மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், துணை மின் நிலையம், மின் வாரியத்தின் மின் உபகரணங்கள் சேமிப்புக் கிடங்கு ஆகியவை உள்ளன. இந்த அலுவலகத்தில் மீஞ்சூா் சாலையோரத்தில், அடா்ந்த செடி, கொடிகள் நிறைந்து முள்புதா்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளன. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா்கள் வழக்கம்போல் தங்கள் இருக்கைக்கு வந்து பணிகளைத் தொடங்கினா். அப்போது உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணியைத் தொடங்க மேஜை நாற்காலி கணினி பிரிண்டா் இயந்திரத்தை சுத்தம் செய்தனா். அப்போது பிரிண்டா் இயந்திரம் தானாகவே அசைந்த நிலையில், உள்ளே பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊழியா்கள் சிலா் பிரிண்டா் இயந்திரத்தை வெளியே கொண்டு வந்து, நீண்ட நேரம் போராடி, பாம்பை வெளியே எடுத்தனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

ADVERTISEMENT

 

பொன்னேரி மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி, பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பு. ~பொன்னேரி மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி, பிரிண்டா் இயந்திரத்தில் புகுந்த பாம்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT