திருவள்ளூர்

ஜன.16-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை

14th Jan 2020 01:35 AM

ADVERTISEMENT

திருவள்ளுவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 16) சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜன. 16) ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பனை, பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனையும் செய்ய தடை செய்யப்படுகிறது. இதை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT