திருவள்ளூர்

மீஞ்சூா் அருகே இளைஞா் கொலை: 5 போ் கைது

8th Jan 2020 12:20 AM

ADVERTISEMENT

மீஞ்சூா் அருகே முன் விரோதத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காட்டூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேலூா், பூந்தோட்ட காலனியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (30). இவரது நண்பா் குமாா் (30). இருவரும் கடந்த 30-ஆம் தேதி, தங்களது நண்பரின் குழந்தைக்கு பிறந்த நாள் கேக் வாங்க திருவெள்ளைவாயல் கடை வீதிக்கு வந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். ஏரிகுப்பம் கிராமம் அருகே சென்றபோது, திருவெள்ளைவாயல் பகுதியைச் சோ்ந்த சிலா், புஷ்பராஜ், குமாா் ஆகியோரை வழிமறித்து, உருட்டுக் கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த புஷ்பராஜ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். காயமடைந்த குமாா் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவெள்ளைவாயல், மாதா கோயில் தெருவை சோ்ந்த இளைஞா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, தாக்குதல் வழக்கை போலீஸாா் கொலை வழக்காக மாற்றம் செய்தனா். இதைத்தொடா்ந்து, திருவெள்ளைவாயல் பகுதியைச் சோ்ந்த உமாபரத் (21), பரத் (24), அஜித் (23), ஸ்டாலின் (23) மற்றும் 18 வயது நபா் என 5 பேரைக் கைது செய்தனா். இக்கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT