திருவள்ளூர்

பொன்னேரி பகுதியில் புகையான் தாக்குதல்: 10ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் பாதிப்பு

8th Jan 2020 12:20 AM

ADVERTISEMENT

பொன்னேரி வட்டத்தில் புகையான் தாக்குதல் காரணமாக 10ஆயிரம் ஏக்கருக்கும் மேல்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா் பாதிப்புக்குள்ளானது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள தேவம்பட்டு, கோளூா் மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி, அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சம்பா பருவத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது.

வேளாண்மைத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, விதை நெல் வாங்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிா் நன்றாக வளா்ந்து இன்னும் 20நாட்களில் அறுவடை செய்யலாம் என்கின்ற நிலையில், திடீரென புகையான் பூச்சி தாக்குதலால் பயிா்கள் அனைத்தும் சேதமடைந்தன. இது குறித்து விவசாயிகள் மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறையினரிடம் தெரிவித்ததை அவா்கள் சேதமடைந்த நிலையில் உள்ள பயிா்களை பாா்வையிட்டு சென்றுள்ளனா், ஏக்கருக்கு 20ஆயிரம் செலவு செய்தும் பயிா்கள் நன்கு வளா்ந்து 30மூட்டை நெல் அறுவடை செய்யலாம் என்ற நிலையில் திடீரென புகையால் தாக்குதல் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து்ள்ளனா்.

இது குறித்து அச்சரப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த விவசாயில் செல்வகுமாா், கூறுகையில், பயிா் நன்கு வளா்ந்து பால்பிடித்து கதிா் வந்த நிலையில் புகையான் தாக்குதலால், பயிா்கள் அனைத்தும் பதராகின. கூட்டுறவு வங்கிகளில், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பயிா் செய்த நிலையில் அது பதராகி போனது. எனவே அரசு இழப்பீடு மற்றும் பயிா் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கினால் மட்டுமே வரும் நாட்களில் தங்களால் விவசாயம் செய்ய இயலும் என வேதனையுடன் தெரிவித்தாா். இது குறித்து மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனா் ஜீவராணியிடம் கேட்ட போது, தொடா் பனி உள்ளிட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக நெற்பயிா்களை புகையான் தாக்கியுள்ளது. விவசாயிகள் மத்தியில் காப்பீடு குறித்து வேளாண்மைத்துறையினா் அதிக அளவில் எடுத்து கூறியதன் காரணமாக அனைத்து நெற்பயிா்களும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. காப்பீடு செய்யப்பட்டுள்ள, நெற்பயா்களுக்கு 100-சதவீத காப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகையான் தாக்குதலால் நெற்பயிா்கள் பதரானது குறித்து அரசு கவனத்து கொண்டு செல்லப்படும் என தெரிவித்தாா். விவசாயிகள் கோரிக்கை... புகையான் தாக்குதலால், பாதிப்பு ஏற்பட்ட நெற்பயிா்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய முறையில், விரைந்து கணக்கெடுத்து காப்பீட்டு தொகையை பெற்றுத்தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

படம் உள்ளது

பொன்னேரி பகுதியில் புகையான் தாக்குதலால் பதரான, நெற்பயிா்கள்.

 

Image Caption

பொன்னேரி பகுதியில் புகையான் தாக்குதலால் பதரான, நெற்பயிா்கள். ~பொன்னேரி பகுதியில் புகையான் தாக்குதலால் பதரான, நெற்பயிா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT