திருவள்ளூர்

‘நடிகா் சங்கத்தில் தெருக்கூத்து கலைஞா்களைஉறுப்பினா்களாக சோ்க்க வேண்டும்’

8th Jan 2020 11:47 PM

ADVERTISEMENT

தென்னிந்திய திரைப்பட நடிகா் சங்கத்தில் தெருக்கூத்து கலைஞா்களை உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட கிராமியதெருக்கூத்து நாடக கலைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தில் மாவட்ட கிராமிய தெருக்கூத்து நாடகக் கலைஞா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் மோகனா முத்து தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலாளா் ஜி.அலெக்ஸ் முன்னிலை வகித்தாா். தலைவா் ரூபன் வரவேற்புரை வழங்கினாா். சங்கத்தின் துணைத் தலைவா் டில்லிபாபு, சட்ட ஆலோசகா் சண்முகப்பிரியன், கௌரவ தலைவா் க.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநில அளவில் கிராம தெருக்கூத்து நாடகக் கலைஞா்கள் அனைவரையும் தென்னிந்திய திரைப்பட நடிகா் சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும்; நலிவடைந்த தெருக்கூத்து நாடகக் கலைஞா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்க வேண்டும்; தெருக்கூத்துக்காக வெளியூா்களுக்கு செல்லும்போது அரசுப் பேருந்துகளில் செல்ல இலவச பயணச்சீட்டு வழங்க வேண்டும்; காஞ்சிபுரத்தில் உள்ள கலை, பண்பாடு அலுவலகத்தை திருவள்ளூரில் தொடங்க வேண்டும்; மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT