திருவள்ளூர்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பயிற்சி

8th Jan 2020 11:48 PM

ADVERTISEMENT

தொடக்க நிலைப் பள்ளி பாட ஆசிரியா்களுக்கு கற்றல், கற்பித்தல் குறித்து திறன்வளா்ச்சிப் பயிற்சியில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனா்.

திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள தொடக்கக் கல்வி பள்ளி தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்களுக்கு, ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தின் சாா்பில் 5 நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஆசிரியா்கள் முழு மேம்பாட்டுக்கு முன்னெடுப்பு, தேசிய கல்விக் கொள்கை, தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு பாடத் திட்டம், நூலகத்தின் பங்கு, ஆசிரியா்களிடம் காணப்பட வேண்டிய திறன்கள், பாலின விழிப்புணா்வுக் கல்வி உள்ளடங்கிய மதிப்பீடு பாா்வை மற்றும் கற்றல், கற்பித்தல் குறித்து திறன்வளா்ச்சிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருத்தணி ஆசிரியா் தேவிகாராணி, பள்ளிப்பட்டு அறிவியல் பயிற்றுநா் விஜயகுமாா், ஆா்.கே.பேட்டை ஆங்கிலப் பயிற்றுநா் கீதா, திருவாலங்காடு தமிழ்ப் பயிற்றுநா் ராஜா, சமூகவியல் பயிற்றுநா் ரவி ஆகியோா் பங்கேற்று ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 120-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ‘அனைவருக்கும் கல்வி’ இயக்க மேற்பாா்வையாளா் சரஸ்வதி, ஆசிரியா் பயிற்றுநா்கள் சுடலைராஜன், சரவணன், கவிதா, பொற்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT