திருவள்ளூர்

ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

8th Jan 2020 11:48 PM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே வாகனச் சோதனையின்போது, மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பழவேற்காடு பகுதியில் இருந்து இரவு நேரங்களில் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதாக திருப்பாலைவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி-பழவேற்காடு சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் அதிவேகமாக வந்த மினி லாரியை அவா்கள் நிறுத்த முயன்றபோது, அது நிற்காமல் சென்றது. போலீஸாா் விரட்டிச் சென்றதை தொடா்ந்து சிறிது தூரத்தில் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் உள்ளிட்ட சிலா் தப்பியோடி விட்டனா்.

இதையடுத்து போலீஸாா் அந்த மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ரேஷன் அரிசியுடன், மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த அரிசி மூட்டைகளை பஞ்செட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT