திருவள்ளூர்

பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டையில் வெற்றி பெற்றவா்கள்

3rd Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 தினங்களாக எண்ணப்பட்டு வெள்ளிக்கிழமை முழுமையான முடிவுகள் வெளியிடப்பட்டன.

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிகளில் 6 இடங்களில் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிக வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஓா் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 6 இடங்களில் வென்ற அதிமுக ஒன்றிய குழுத் தலைவா் பதவியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் 8, திமுக கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஒன்றிய குழுத் தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT