திருவள்ளூர்

ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் அறிவிப்பில் குளறுபடி

3rd Jan 2020 10:39 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் என்.உஷா ஸ்ரீதர் வெற்றி பெற்ற நிலையில் வசந்தி என்கிற வேட்பாளர் வெற்றி பெற்றதாக தவறான தகவலும், தவறான வாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியானதால் பெரும்  குழப்பம் ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வசந்தி, உஷா ஸ்ரீதர், தாரகேஸ்வரி, ஜோதி ஆகியோர் போட்டியிட்டனர்.

வியாழக்கிழமை நள்ளிரவு வெளியான தேர்தல் முடிவில் உஷா ஸ்ரீதர் 1601 ஓட்டுகள் பெற்று அவருக்கு அடுத்தபடியாக 1373 ஓட்டுகள் பெற்ற தாரகேஸ்வரி என்கிற வேட்பாளரை விட 223 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற உஷா ஸ்ரீதரை அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அவர்களது ஊராட்சிக்கு அழைத்து சென்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவை தட்டச்சு செய்யும் பகுதியில் நள்ளிரவு தூக்க கலக்கத்தில் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கையை தவறுதலாக தட்டச்சு செய்து 198 வாக்குகளே பெற்ற லட்சுமி 1225 பெற்றதாக குறிப்பிடப்பட்டது. மேலும் 1601 ஓட்டுகள் பெற்ற உஷா ஸ்ரீதரின் ஓட்டுகளும் 1007 என வேறொரு ஊராட்சி முடி வை தவறுதலாக ஈகுவார்பாளையத்தில் பதிந்துவிட்டனர்.

இது குறித்து அறிந்த வசந்தியின் ஆதரவாளர்கள் வசந்தி வெற்றி பெற்றதாக அவர்கள் பகுதியில் கூறியதால் வெற்றி பெற்ற உஷா ஸ்ரீதர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அவரது ஆதவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு விரைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து தவறை உணர்ந்த அதிகாரிகள் உண்மையான தேர்தல் முடிவை அறிவித்த நிலையில், உஷா ஸ்ரீதர் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் சாமிநாதன் வழங்கினர்.

இதனை தொடர்ந்தே அங்கு நிவவிய பதட்டம் தணிந்தது.

வெற்றி வேட்பாளரை மாற்றிய இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT