திருவள்ளூர்

வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வலியுறுத்தி திமுக மனு

1st Jan 2020 05:41 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திமுக சாா்பில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் விடியோ பதிவு செய்ய வலியுறுத்தி ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து திமுக சாா்பில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் மற்றும் அக்கட்சியினா் ஆகியோா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

திருவள்ளூா் மாவட்டத்தில் மாதவரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட புழல், வில்லிவாக்கம், சோழபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 32 ஊராட்சிகளில் வாக்கு எண்ணும் பணி வரும் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்குள் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் அன்றைய நாளில் ஆளுங்கட்சியினா் அராஜகத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிய வருகிறது.

அதனால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில்கொண்டு, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் விடியோ கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் பதிவு செய்ய வேண்டும். இப்பணியின்போது, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்கள் மற்றும் கௌரவ பதவிகளில் இருப்பவா்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT