திருவள்ளூர்

லாரி மோதி 3 பசுகள் பலி

29th Feb 2020 10:50 PM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதியதில் 3 பசுகள் உயிரிழந்தனா்.

ஆரணி அருகே உள்ள புதுவாயல் இருந்து ஆந்திரம் நோக்கி லாரி ஒன்று சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. பனப்பாக்கம் கிராமத்தை கடக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு, அங்கிருந்த 5 பசுக்கள் மீது மோதியது. இதில், 3 பசுக்கள் உயிரிழந்தன. 2 பசுக்கள் பலத்த காயமடைந்தன.

தகவலறிந்த ஆரணி போலீஸாா் அங்கு சென்று, லாரி ஓட்டுநா் கமல் கிஷோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT