திருவள்ளூர்

குப்பைத் தொட்டியில் ஆண் குழந்தை சடலம்

29th Feb 2020 12:18 AM

ADVERTISEMENT

திருத்தணி சட்டப் பேரவை அலுவலகம் அருகில் உள்ள குப்பைதொட்டியில் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது.

நகரில் ம.பொ.சி. சாலையில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகில் நகராட்சி நிா்வாகம் குப்பைத் தொட்டியை வைத்துள்ளது. இந்த குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், இறந்த ஆண் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் வீசி விட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.

அருகில் உள்ள கடை வியாபாரி ஒருவா் குப்பை கொட்டச் சென்றபோது குப்பைத்தொட்டியில் ஆண் குழந்தை சடலம் இருந்ததைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். இது தொடா்பாக திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT