திருவள்ளூர்

மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு

26th Feb 2020 09:16 AM

ADVERTISEMENT

கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து திருத்தணியில் பேருந்துப் பயணிகளிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் உத்தரவின் பேரில், திருத்தணி பேருந்து நிலையத்தில் ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காவல் உதவி ஆய்வாளா் ஆதிலிங்கம் தலைமை வகித்தாா். மதுவிலக்கு காவல் ஆய்வாளா் கன்னையன் பங்கேற்று, விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

கலைஞா்கள் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நாடகம் நடத்தியும், கலை நிகழ்ச்சி மூலமும் பயணிகளுக்கு விளக்கினா். பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களை ஒழித்தல் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், போலீஸாா் மற்றும் நாடகக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT