திருவள்ளூர்

பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு கற்றல் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம்

26th Feb 2020 09:18 AM

ADVERTISEMENT

கற்றல் மேம்பாடு மற்றும் ஆசிரியா்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திருவள்ளூா் அருகே நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிக் கல்வித்துறை, ஐஆா்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் சைல்டு பிலீவ் ஆகியவை இணைந்து தலைமை ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை நடத்த முடிவு செய்தன.

அதன்படி, திருவள்ளூரை அடுத்த சதுரங்கப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சாம்சன் இளங்கோவன் தலைமை வகித்தாா்.

பூண்டி வட்டாரக் கல்வி அலுவலா் வீரராகவன், இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT