திருவள்ளூர்

சிந்தலக்குப்பத்தில் சுத்திரிகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையம் திறப்பு

26th Feb 2020 06:33 PM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கெமின் தொழிற்சாலை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தலக்குப்பம் பகுதி மக்கள் மற்றும் அப்பகுதி பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கெமின் தொழிற்சாலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கெமின் தொழிற்சாலை நிர்வாகத்தார் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிந்தலக்குப்பத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டியும், பள்ளியின் எதிரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை அமைத்தனர். தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் திறப்பு விழா சிந்தலக்குப்பத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு எஸ்.ஆர். கண்டிகை ஊராட்சித் தலைவர் சி.எம்.ரேணுகா முரளி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், அதிமுக நிர்வாகி எம்.ஆர்.சி.செங்கைய்யா முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கெமின் தொழிற்சாலை உதவி தலைவர் ஜார்ஜ் ஜோசப் பங்கேற்றார். திட்ட மேலாளர் அருள் ஆனந்தன் வரவேற்றார். செயல் மேலாளர் முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முரளி, கெமின் தொழிற்சாலை உதவி தலைவர் ஜார்ஜ் ஜோசப் திறந்து வைத்தனர்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் மூலம் சிந்தலக்குப்பம் பகுதி மக்கள் 1 மணி நேரத்தில் 1000 லிட்டர் குடிநீர் என 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும் என்று கெமின் நிறுவனத்தினர் தெரிவித்தனர். விழா முடிவில் மனித வள மேலாளர் ஹூசைன் நன்றி கூறினார்.

Tags : Gummidipoondi
ADVERTISEMENT
ADVERTISEMENT