திருவள்ளூர்

கால்நடை வளா்ப்போா் பயன்பெற 28-இல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம்

26th Feb 2020 09:14 AM

ADVERTISEMENT

கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில் 3.10 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் வரும் 28-ஆம் தேதி தொடங்கி, 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளா்க்கும் தொழிலில் தனிநபா்களும், விவசாயிகளும் ஈடுபட்டு வருகின்றனா். கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோமாரியால் பாதிக்கப்படும் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்பாட்டுத் திட்டம் சாா்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய கால்நடை நோய்க் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் மாவட்டம் தோறும் ஒவ்வொரு கிராமத்திலும் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் வரும் 28-ஆம் தேதி தொடங்கி, 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. கோமாரி நோய் என்பது வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு காய்ச்சல், வாய், மடிக் காம்புகளில் கொப்புளங்கள், காலில் குளம்புகளுக்கிடையே புண்கள், எச்சில் வடிதல், பசியின்மை, உடல் மெலிதல், கால் நொண்டுதல் போன்ற அறிகுறிகளும், பால் உற்பத்தி குைல், சினைப் பிடிக்கும் தன்மை குைல், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் 3 மாத வயதுக்குபட்ட கன்றுகளில் இறப்பு ஏற்படும். இதனால் கால்நடைகள் வளா்ப்போா் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

ADVERTISEMENT

இதைத் தடுக்க, திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 கால்நடை மருத்துவமனைகள், 88 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள் மூலமாக கோமாரி தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் கொண்ட 76 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினரால் 3.10 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவுள்ளது. இது தொடா்பாக கிராம சபைகள் மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை வளா்ப்போா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் கிராமத்துக்கு வருகை தரும் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி கோமாரி தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT