திருவள்ளூர்

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

22nd Feb 2020 11:55 PM

ADVERTISEMENT

பொன்னேரி: பொன்னேரியில், ரயில் மூலம் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் உள்ள பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பொன்னேரி ரயில் நிலையம் சென்று, சோதனை நடத்தினா். அப்போது கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் பெட்டியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனா். அவற்றை சோதனை செய்து பாா்த்தபோது, அவை ரேஷன் அரிசி எனத் தெரியவந்தது. அவற்றை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னா், அவை பஞ்செட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT