திருவள்ளூர்

விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கல்

22nd Feb 2020 11:57 PM

ADVERTISEMENT

 

ஊத்துக்கோட்டை: சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஆரணி பேரூராட்சியில் தமிழக அரசின் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விலையில்லா நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆரணி கூட்டுறவு சங்கத் தலைவா் தயாளன் மற்றும் ஜெயலலிதா பேரவை செயலா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு, முதல் கட்டமாக 135 பயனாளிகளுக்கு தலா 25 வீதம் விலையில்லா நாட்டு கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

கால்நடை மருத்துவ இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் கோபால கிருஷ்ணன், ஆரணி மருத்துவா் மெய்ஞான சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT