திருவள்ளூர்

பள்ளிப்பட்டு ஒன்றியக் குழு கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதம்

22nd Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

 

திருத்தணி: பள்ளிப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பள்ளிப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது. ஒன்றியக் குழுத் தலைவராக ஜான்சிராணி போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுவின் முதல் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் சேகா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அருள் வரவேற்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இந்த ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் குடிநீா், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது.

ஒன்றிய உறுப்பினா்கள் உஷா ஸ்டாலின், ரவி, முத்து ரெட்டி, பாரதி, முத்துராமன், ஜெகதீஷ், நதியா நாகராஜ், சுகுணா நாகவேலு உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT